சென்னை:

ழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்றும், வரலாற்று சிறப்பு மிக்கது என்றும்  என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், குறைந்தபட்ச வருமானத்தை எல்லா ஏழைகளுக்கும் உறுதி செய்யும். அதாவது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறு வார்கள். இதனால், பசி, வறுமை எதுவும் இந்தியாவில் இருக்காது என்று புரட்சிகர திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  விளக்கினார்.

அப்போது,  ஏழைகளை வாழ வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்து உள்ளார். இந்தியாவில் செலவுக்கு பணம் இல்லை என்று ஒருவர் கூட இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் செலுத்தப்படும் என்பதை நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த திட்டம்,  மோடி ஏமாற்றியதை போல ஏமாற்றும் திட்டம் இல்லை என்றவர், இந்த திட்டம் குறித்து, தீர ஆராய்ந்து,  செயல்படுத்தக்கூடிய அம்சங்களின் அடிப்படையிலேயே  ராகுல் காந்தி இந்த புரட்சிகர திட்டத்தை கையில் எடுத்து உள்ளார் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். ஆனால் ராகுல் காந்தி ஏழைகளுக்கு உதவுபவர்.  இதுதான் பாஜனதாவுக்கும் காங்கி ரசுக்கும் உள்ள வேறுபாடு என்ற திருநாவுக்கரசர்,  ராகுல் காந்தி பிரதமரானதும் இந்தத் திட்டம் தான் முதலில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் மோடி அலை ஓய்ந்துவிட்டது. தற்போது  ராகுல் அலை தங்கி யிருக்கிறது என்றவர்,  தமிழ்நாட்டில் கூட்டணிக்கான கதவை மோடி திறந்து வைத்துள்ளார். ஆனால் படி தாண்டி செல்ல யாரும் முன்வரவில்லை. நாட்டில் மட்டுமல்ல/

தென் மாநிலங்களில் 132 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசர் பேட்டியின்போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் மாநில துணைத்தலைவர் தாமோதரன், பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, செல்வம், கிளியனூர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகர், வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.