கமதாபாத்

பிரதமர் மோடி தனக்கு மிகவும் உதவியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

குஜராத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.   பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் பங்கு பெற்றுள்ளனர்.    குஜராத் மாநில செய்தித் தொலைக்காட்சியான ஜி எஸ் டி வியில் ராகுல் காந்தி பேட்டி ஒன்று ஒளி பரப்பாகி உள்ளது.   அப்போது நேரு – காந்தி குடும்பங்களைப் பற்றிய மோடியின் கருத்து பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

ராகுல், “மோடிஜி எனக்கு மிகவும் உதவி உள்ளார்.  நான் எவ்வாறு அவரை வெறுப்பேன்?   நமது நாடு மற்றும் மத ரீதியான சரித்திரத்தை பார்க்கும் போது அனைவரையும் நேசிக்க வேண்டும் எனவும் வெறுக்கக் கூடாது எனவும் சொல்லப்பட்டுள்ளது.   அதனால் அவர் எனது குடும்பத்தை விமரிசித்ததற்கு எனக்கு கோபம் வரவில்லை.   இதுதான் எங்கள் குடும்பத்தின் பண்பு.   ஒரு வேளை குஜராத்தை சேர்ந்த மகாத்மா காந்தி என்னும் பெரியவர் எங்களுக்கு அதை சொல்லிக் கொடுத்திருக்கலாம்” எனக் கூறி உள்ளார்.