துபாய்வாழ் இந்திய தொழிலாளர்களின் தோள்மேல் கை போட்டு ராகுல் ‘செல்ஃபி’

துபாய்:

2 நாள்  துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று துபாய் சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய நாடாளுமன்ற தேர்தல்  விரைவில் வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல், அங்கு வசிக்கும்  இந்தியர்களை சந்தித்து வருகிறார்.

அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சிகள் மட்டுமல்லாத தனிப்பட்ட முறையிலான சந்திப்புகளும் நடைபெறுகின்றன.  இதன் ஒரு பகுதியாக இன்று அங்கு பணி புரிந்து வரும் இந்திய தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.

ராகுல் காந்தியின் எளிமையான நடவடிக்கை அங்குள்ள இந்திய தொழிலாளர்களி டையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அவர்கள் ராகுல்காந்தி யுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பலர் ராகுல்காந்தியின் தோள் மீது கைபோட்டுக்கொண்டு தனது நண்பரைப்போல எண்ணி படம் எடுத்துக் கொண்டனர்.  ராகுலும், அவர்களின் ஆசைக்கு தடைபோடாமல் அவர்களுடன் இணைந்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்து அசத்தினார்.

ராகுலுடன் செல்பி எடுத்த இளைஞர்கள், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.