என்னைக் கட்டிப் பிடிக்கும் முன் ராகுல் 10 முறை யோசிக்க வேண்டும் : யோகி

க்னோ

ம்மை கட்டிப் பிடிக்கும் முன்பு ராகுல் காந்தி 10 முறை யோசிக்க வேண்டும் என உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசின் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.   தனது உரையின் முடிவில் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டித் தழுவினார்.   அனைவரும் எதிர்பாராத இந்த செய்கையால் நாடே பரபரப்பானது.

இதுகுறித்து பல அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை சொல்கின்றனர்.    உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் சமீபத்தில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யோகி ஆதித்யநாத்தை கட்டித் தழுவினால் அவருடைய மனநிலை எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு யோகி, “என்னைக் கட்டித் தழுவவதாக இருந்தால் ராகுல் காந்தி அதற்கு முன்பு 10 தடவை யோசிக்க வேண்டும்.   எனக்கு அது போல அரசியல் ஸ்டண்டு வேலைகள் சிறிதும் பிடிக்காது.   ராகுல் காந்தி ஒரு குழந்தையைப் போல நடந்துக் கொள்கிறார்.  அவருக்கு அரசியல் அறிவும் முடிவுகளை எடுக்கும் திறனும் கொஞ்சம் கூட இல்லை.   ஒரு பொறுப்பான மனிதர் இது போல கட்டித் தழுவும் செய்கைகளை செய்ய மாட்டார்” என பதில் அளித்துள்ளார்.