புதுடெல்லி:
டந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சிறந்த நிலையில் உள்ளது என மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும்போது மத்திய அரசை எச்சரித்தார். இது ஒரு கொடிய நோய். சரியான முன்னெச்சரிக்கை எடுக்காவிடில் பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்றார். ஆனால் மோடி தலைமையிலான அரசு ராகுல் காந்தி எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

தற்போது கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் மோடி, மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் இருக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததுதான் என்று தெரிவித்து வருகிறார்.

நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி ‘‘சரியான முடிவு சரியான நேரத்தில் எடுத்ததன் அர்த்தம், இந்தியா மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளது’’ விமர்சித்துள்ளார்.

ஜூலை 28-ந்தேதி இந்தியா சிறந்த நிலையில் இருக்கிறது என்றால். அப்போது இந்தியாவில் தொடர்ந்து ஏழாவது நாளாக 45 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஜூலை 30-ந்தேதி 50 ஆயிரத்தை தாண்டியது.

இந்தியாவில கடந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.