காங்கிரஸ் தலைமை ஏற்று ஒரு வருட முடிவு : நன்றி கூறும் ராகுல் காந்தி டிவீட்

டில்லி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஒரு வருடம் ஆனதை ஒட்டி அவர் நேற்று டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ராகுல் காந்தி பதவி ஏற்றுக் கொண்டார்.  நேற்றுடன் அவர் பதவி ஏற்று ஒரு வருடம் முடிவடைகிறது.   இந்த ஒரு வருடத்தில் அவர் தனது கட்சியை பல தேர்தல்களில் வெற்றி பெற வைத்துள்ளதாக காங்கிரஸ்  மூத்த தலைவர்களும்  தொண்டர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.   அந்த பதிவுக்கு 24000 பேருக்கு மேல் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அதை மறுபதிவு செய்துள்ளனர்.

ராகுல் தனது டிவிட்டரில், “காங்கிரஸ் தலைவராக நான் பதவி ஏற்றுக் கொண்ட முதல் வருட முடிவில் நான் வலுவான, ஒருங்கிணைந்த மற்றும் துடிப்பான கட்சியாக காங்கிரசை மாற்றும் பொறுப்புள்ளதை மீண்டும் நினைவு கொள்கிறேன்.  இன்று எனக்கு கிடைத்த வாழ்த்துச் செய்திகளுக்கு நான் மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.