டில்லி:
காத்மா காந்தி கொலை தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்காக அவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கோர்ட்டுக்கு இழுத்திருப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு சமம் என்று மூத்த அரசியல் விமர்ச்சகரும் சமூகவியலாளருமான ஆஷிஷ் நந்தி தெரிவித்துள்ளார்.
1asis1rahul
கடந்த 2014–ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி என்ற இடத்தில்  ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய  ராகுல் காந்தி, ‘காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இயக்கமே’ என்று பேசினார். இதைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் குண்டே என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ராகுல் மீது ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இந்த செயல் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே பங்கமாக முடியப்போகிறது. ராகுல் எதிர்பார்த்தது இதைத்தான். இதுதான் காங்கிரஸின் ராஜதந்திரம். காத்திருந்து பாருங்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் புலிவாலைப் பிடித்த கதையாக இதன் எதிர்வினையை அனுபவிக்கப் போகிறார்கள் என்று ஆஷிஷ் நந்தி தெரிவித்தார்.
ராகுலின் இப்பேச்சை அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.