அசத்திய திரிபாதி : வென்றது புனே!

Rahul Tripathi’s breakneck knock powers Pune to third; helps beat Kolkata by 4 wickets

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே அணி ஏழாவது வெற்றியை ஈட்டியது. ராகுல் திரிபாதி 93 ரன்கள் எடுத்து அசத்தினர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்டீவன் சுமித், முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். தொடக்க வீரர் சுனில் நரேன் (0) பந்து வீசிய உனட்கட்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷெல்டன் ஜாக்சன் (10 ரன்) சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை எதிர்கொண்ட போது, ‘ஹிட்விக்கெட்’ ஆனார். புனே பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் திணறியது கொல்கத்தா.

கவுதம் கம்பீர் 24 ரன்களில் ஆட்டமிழக்க, யூசுப் பதான் 4 ரன்னில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். மணிஷ் பாண்டே மட்டும் தாக்குப்பிடித்து 37 ரன் எடுத்தார். கிராண்ட் ஹோம் 36 ரன், சூர்யகுமார் யாதவ் 30 ரன் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 155 ரன்கள் எடுத்தது. புனே தரப்பில் உனட்கட், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய புனே அணியில் ரஹானே, கேப்டன் ஸ்மித், மனோஜ் திவாரி, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் மற்றொரு முனையில், தொடக்கம் முதலே அதிரடியில் ஈடுபட்ட ராகுல் திரிபாதி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். சதம் அடிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் 52 பந்துகளில் 93 ரன்கள் குவித்து திரிபாதி ஆட்டமிழந்தார். புனே அணி 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. வோக்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். திரிபாதி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.