பஹ்ரைன் இளவரசர் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட்

னாமா, பஹ்ரைன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஹ்ரைன் இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத்தை நேற்று சந்தித்தார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதைவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பஹ்ரைனுக்கு சென்றுள்ளார்.   அவர் நேற்று பஜ்ரைன் தலைநகரான மனாமாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அத்துடன் பஹ்ரைனின் பட்டத்து இளவரசரான ஷேக் சல்மான் பின் ஹமாத்தை சந்தித்து பேசி உள்ளார்.

அந்த சந்திப்பில் இரு நாட்டு நலன் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது.    அதைத் தொடர்ந்து பஹ்ரைன் அரசர் ஹமா பின் இசா அல் காலிஃபா மற்றும் பிரதமர் சல்மான் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.   ராகுல் காந்திக்கு பஹ்ரைன் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷேக் காலித் விருந்து ஒன்றை அளித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “பஹ்ரைன் பட்டத்து இளவரசர் ஷேக் சல்மானுடன் ஒரு இனிய சந்திப்பு நிகழ்ந்தது.    பஹ்ரைன் மற்றும் இந்தியாவின் நலன் குறித்து பல விஷயங்களை நாங்கள் விவாதித்தோம்”  என பதிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rahul tweeted about Bahrain prince meet
-=-