விமானி அபிநந்தன் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் : ராகுல் காந்தி

டில்லி

பாகிஸ்தானியர்களால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

இன்று இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படையினருக்கு எதிராக இந்திய விமானப்படை எதிர் தாக்குதல் நடத்தியது. அதில் இந்தியாவின் மிக் 21 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை செலுத்திய விமானியான சென்னையை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காண்டி தனது டிவிட்டரில், “இந்திய விமானப்படையின் தைரியம் மிக்க வீரர் ஒருவர் பிடிபட்ட செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும். அந்த வீரர் நலமுடன் திரும்புவார் என நான் நபுகிறேன். இந்த நெருக்கடியான நாங்கள் ராணுவப்படைக்கு ஆதரவாக இருக்கிறோம்.” என பதிந்துள்ளார்.