புதுடெல்லி: மத்திய அரசு மீன்வளத்துக்கு என்று தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

புதுச்சேரிக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, அங்கே, மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை, மத்திய அரசு அலட்சியப்படுத்தியதை அடுத்து, இவ்வாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ராகுல் காந்தி.

கடந்த 17ம் தேதியன்று, புதுச்சேரியில், மீனவர்களை ‘கடலின் உழவர்கள்’ என்று அவர் புகழ்ந்துரைத்தார்.

வேளாண் துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே, சமஅளவிற்கு மீன்வளத் துறைக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றுள்ளார் ராகுல் காந்தி.

மீன்வளத்திற்கென்று, தனியாக துறை இருப்பது போதுமானதல்ல என்றும், அதற்கென்று தனியாக ஒரு அமைச்சகமே வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் ஆகிய துறைகளுக்கு, ஒரே அமைச்சகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவேதான், ஒரு தனியான துறைக்கும், ஒரு தனியான அமைச்சகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர்.