கேரளா சென்ற ராகுல்: அதிகாரிகளுடன் ஆய்வு

வயநாடு:
கேரளா மாநிலம் வயநாடுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்., எம்.பி., ராகுல், மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

காங்., எம்.பி., ராகுல் தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு இன்று வருகை தந்தார். இதற்காக டில்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் கோழிக்கோடு வந்து சேர்ந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 3 நாள் பயணமாக வயநாடு தொகுதியில் ஆய்வு செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து சாலை வழியாக மலப்புரம் புறப்பட்ட ராகுல், மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். அடுத்த இருநாட்களும் வயநாடு செல்லும் ராகுல், நாளை வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாளை மறுநாள் மனந்தவாடி அரசு மருத்துவமனை செல்கிறார். பின் சிறப்பு விமானம் மூலம் டில்லி திரும்ப உள்ளார்.