நாளை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல், நெல்லையப்பர் கோவிலில் பட்டுசாத்தி சுவாமி தரிசனம் செய்கிறார்..

சென்னை: நாளை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  நெல்லையப்பர் கோவிலில் பட்டுசாத்தி சுவாமி தரிசனம் செய்கிறார்.  அதற்கான கட்டணம் ரூ.10ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தருகிறார். காலை 11 மணி அளவில் தூத்துக்குடி வந்தடைந்தார்.  அவருக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதையடுத்து  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ரோடு ஷோ மூலம் மக்களிடையே நடந்து சென்று ஆதரவு திரட்டியதுடன்,  தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார்.. பின்னர் அங்கிருந்து ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து முக்கானி, குரும்பூர், ஆழ்வார் திருநகரி பகுதிகளில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

 

 

1 thought on “நாளை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல், நெல்லையப்பர் கோவிலில் பட்டுசாத்தி சுவாமி தரிசனம் செய்கிறார்..

Comments are closed.