கவுகாத்தி: மறைந்த அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல் நாளை (26ந்தேதி தகனம்)  செய்யப்பட உள்ளது. முன்னதாக இன்று அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி, தருண் கோகோய் என்னை சொந்த மகனை போல நடத்தினார் என்று வேதனை தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாகிய தரும் கோகாய்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  காலமானார். அவரது உடல் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது  உடலுக்கு இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கவுஹாத்தி சென்றார். அங்கு தருண் கோகாய் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தருண் கோகோய் ஜி என் குரு, என் ஆசிரியர். என்னை அவரது மகனைப்போல, அதே வழியில் நடத்தினார். இந்த வார்த்தைகள் அவரின்  இதயத்திலிருந்து  வந்தன.  அவரது மறைவு எனக்கு பேரிழப்பு.  தருன்கோகாய் காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கினார் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், இன்றைய தினம்  ஒரு சோகமான நாள்.  இன்று  மூத்த தலைவர் அகமது படேல் மரணமடைந்துள்ளார். அடுத்தடுத்து 2 தலைவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டனர் என வேதனை தெரிவித்தார்.