ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்!: மு.க.ஸ்டாலின் சூளுரை

ராகுல்காந்தி பிரதமர்  மு.க.ஸ்டாலின் பேச்சு கருணாநிதி சிலை திறப்பு விழா

இன்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவை ஒட்டி நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், “ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந் கருணாநிதியின் சிலையை தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார். இந்நிகழ்வில அகில இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து  இந்தத் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடந்துவருகிறது.

இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “

 

“நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் இன்று மறக்க முடியாத நாள். அதேபோல தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத தினமாகும்.

வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க இங்கு நாம் கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. சாடிஸ்ட் பிரதமராக நரேந்திர மோடி விளங்குகிறார். உலகில் எங்காவது அசம்பாவிதம் நடந்தால் உடனே ட்விட்டரில் வருத்தம் தெரிவிக்கிறார். ஆனால் இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டு பல மாவட்ட மக்கள் தவித்து வருகிறார்கள். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. அதனால்தான் சேடிஸ்ட் என்கிறேன்.

மேலும் தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி

நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். ஆகவே ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். மேடையில்  உள்ள மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருகே. நல்லாட்சி தருக” என்று ஸ்டாலின் பேசினார்.