டெல்லி:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC – National Register of Citizens)   மாற்றாக, தேசிய வேலையற்றோர் பதிவேடு (National Register of Unemployed – NRU) திட்டத்தை இளைஞர் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

அதன்படி, ஜெய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்நாள் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி என்ஆர்யு திட்டத்தை  தொடங்கி வைத்தார். வேலையின்மைக்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் சேர,  8151994411 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால்  கொடுத்து, தங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள  குடியரிமைச் திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்வற்றுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதுபோல நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து வருவதால், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது.

‘இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேசிய வேலையற்றோர் பதிவேடு (என்ஆர்யு) தொடங்கப்பட்டுள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல், இதனை வெளியிட்டார்.  அப்போது, இந்த திட்டத்தின் மூலம்,   நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அடையாளம் காண முடியும் என்று கூறினார்.

நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அடையாளம் காணும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் இளைஞர்கள், தங்களுக்கு வேலையில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இணைந்துள்ளனர். இவர்களில் 58 ஆயிரம் பேர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.  அடுத்த 3 மாதங்களுலு  இந்த என்ஆர்யு  திட்டத்தில் வேலையில்லாதோர் மேலும் ஏராளமானோர் சேரலாம் என்றும், அதன் முடிவில் தான், நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.