டில்லி: இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…..ராகுல்காந்தி அறிவிப்பு

டில்லி:

டில்லி இந்தியா கேட் பகுதியில் இன்று நள்ளிரவு ராகுல்காந்தி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடக்கிறது.

காஷ்மீரில் 8 வயது சிறுமி 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதேபோல் உத்தரபிரதேசத்திலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘ லட்சகணக்கான இந்திர்களை போல் எனது இதயமும் இன்று காயப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக தற்போது நடக்கும் சம்பவங்களை சகித்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது. அதனால் இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி போராட்டம் இந்தியா கேட் பகுதியில் நடக்கிறது. இதில் என்னுடன் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.