கேரளா: புயலால் பலியான மீனவர்களின் திருவுருவப்படத்திற்கு ராகுல் அஞ்சலி

திருவனந்தபுரம்,

கி புயல் பாதிப்பு காரணமாக கேரளாவும் பாதிப்படைந்தது. அம்மாநில மீனவர்கள் பலர் புயலில் சிக்கி மாயமானார்கள்.

மாநில முதல்வர் பிரனாயி விஜயன் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

புயலின் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி, காசர்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, விதுரா ஆகிய பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அந்த நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கேரள மீனவர்கள் பலர் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று, தமிழகத்தில் ஓகி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடவும், இறந்த மினவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் தமிழகம் வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தவைரான ராகுல்காந்தி, டில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

அப்போது புயல் காரணமாக கேரளாவில் மரணமடைந்த மீனவர்களின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி வந்தடைந்தார்.