டில்லி

ழ்துளைக் குழாய்க் கிணற்றில் விழுந்துள்ள சிறுவன் சுர்ஜித் மீட்பு குறித்துப் பிரார்த்திப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்,

நேற்று முன் தினம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் விட்டுத் தோட்டத்தில் சுர்ஜித் என்னும் சிறுவன விலையாடிக் கொண்டிருந்தான்.    மாலை சுமார் 5.40 மணிக்கு அவன் அங்கு மூடப்படாமல் இருந்த பழைய ஆழ்துளை குழாய்க் கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.

அவனை மீட்கப் பலவித முயற்சிகள் நடந்து தோல்வி அடைந்தன.   தற்போது ரிக் இயந்திரம் மூலம் அருகில் குழி தோண்டி மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.  சுர்ஜித் தற்போது கிட்டத்தட்ட 100 அடி ஆழத்தில் மாட்டிக் கொண்டுள்ளான்   அவன் மேலும் கீழே செல்ல விடாமல் அவனுடைய இரு கைகளும் ஏர்லாக் செய்யப்பட்டு மேலே பிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டும் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “நாடே தீபாவளியைக் கொண்டாடி வரும் வேளையில் வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் ஆழ்துளைக் குழாய்க் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க ஒரு கூட்டம்  போராடி வருகிறது.

அந்தக குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் எனவும், துயரால் வாடும் அந்த குழந்தையின்  பெற்றோருடன் அவன் சேர்க்கப்பட வேண்டும் எனவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.