மோடி அரசால் இந்தியா பிளவுப்படுத்தப்படுகிறது: துபாயில் ராகுல்காந்தி பேச்சு

துபாய்:

இந்தியா அரசியல் காரணங்களுக்காக மோடி அரசால் பிளவுப்படுத்தப்படுகிறது என்று துபாயில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய  ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

ந்திய வம்சாவழியினர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாள்ரகளை சந்திக்கும் நோக்கில்  2 நாள் பயணமாக துபாய் மற்றும் ஐக்கிய அமீரக எமிரேட்டுக்கு பயணம் சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு இந்திய வம்சாவழியினர், இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். துபாய் விமான நிலையத்தில் கூடி இருந்தவர்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது அங்கு இந்திய தொழிலதிபர்களை சந்தித்து பேசிய ராகுல், தொழிலாளர் முகாமுக்கு சென்று அவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை  துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் நிகழ்வில், இந்திய-அரேபிய கலாச்சாரா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர், அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ‘ மகாத்மா காந்தியுடன் 150 வருடங்கள்’ என்ற தலைப்பில் துபாய் வாழ் இந்தியர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ராகுல் துபாய் வருகை மற்றும் இந்திய தொழிலாளர்கள் உடன் சந்திப்பு குறித்து கடந்த ஒரு மாதமாகவே அங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்த நிலையில், நேற்றைய பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி,  அரசியல் காரணங்களுக்காக பாஜக அரசு இந்தியாவை பிளவுபடுத்த முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.  இந்தியாவுக்கு ஒரு கொள்கைதான் சரியானது மற்றவை அனைத்தும் தவறானது என்று சுட்டிக்காட்டியவர், அதை  நம்பும் வரை யாராலும்  இந்தியாவை ஒருபோதும் வழி நடத்த முடியாது என்று தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா சகிப்பு தன்மையை இழந்து வருவதாக கூறிய ராகுல், மோடி அரசு பதவி ஏற்றதுமுதல் இது அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது… இது இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்றும் கூறினார்.

தற்போதைய நிலையில், இந்திய அரசு,  வேலையில்லா திண்டாட்டத்தை மட்டும் அல்ல சீனாவையும் எதிர்கொள்ள வேண்டி  நிலையில் உள்ளது…  என்றும் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் பேச இருப்பதையொட்டி துபாய் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இந்திய வம்சா வழியினர், இந்திய தொழிலாளர்கள் துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் கூடினர். எங்கு நோக்கிலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. ராகுலின் பேச்சை ஏராளமானோர் தங்களது மொபைல் போனிலும், காமிராக்களிர் படமும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர். அவைகள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது-

துபாயில் ராகுல்காந்தி பேசும் வீடியோ… 

https://www.facebook.com/rahulgandhi/videos/1199423056883062/

கார்ட்டூன் கேலரி