ந்து அல்லாதோர் வருகை பட்டியலில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக பா.ஜனதா மேற்கொண்ட பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி முறியடித்தது.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடப்பதை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அங்குள்ள சோம்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அக்கோயிலுக்குச் செல்பவர்கள், வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அதன்படி கையெழுத்திட்டு ராகுல் சென்றார்.

இந்த நிலையில் கோவிலில் ராகுல் காந்தி இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் கையெழுத்து இட்டதாக புகைப்படம் ஒன்றை, பாஜகவினர் பரப்பினர்.

பாரதீய ஜனதா கட்சியின் குஜராத் மாநில தலைவர் ராஜு தருவ், “ராகுல் காந்தி கோவில்களுக்கு செல்கிறார். ஆனால் கோவில் வருகைப் பதிவேட்டில் இந்து இல்லை என குறிப்பிட்டு உள்ளார்,” என்று விமர்சித்தார்.

பாஜகவின் இதர தலைவர்களும் இதே போல் விமர்சித்து வருகிறார்கள். இவ்விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் காங்கிரஸ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிடப்பட்டு, “சோம்நாத் கோவிலில் ஒரு வருகைப் பதிவேடு மட்டுமே இருந்தது, அதில்தான் ராகுல் காந்தி கையெழுத்திட்டார். இதுதவிர்த்து வேறு புகைப்படம் வெளியிடப்பட்டால் அது புனையப்பட்டதாகவே இருக்கும்.

தோல்வி விரக்தியில் பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா பேசுகையில், “கோவில் வருகை பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.

இப்போது வெளியாகி உள்ள கையெழுத்து மாறுபட்டது, அது ராகுல் காந்தியின் கையெழுத்தும் கிடையாது, புகைப்படத்தில் இடம்பெற்று உள்ள விண்ணப்ப நகலும் கோவிலில் வழங்கப்பட்டது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.