நாளை கருணாநிதி சிலை திறப்பு விழா: காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்பு

சென்னை:

நாளை கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையானது திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டு வருகிறது.

நாளை சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கேரள முதல்வர், ஆந்திர முதல்வர் உள்பட வட இந்திய தலைவர்கள், கூட்டணி கட்சியினர் கலந்துகொள்கின்றனர். அவர்களுடன் ராகுல்காந்தியும் கலந்துகொள்கிறார்.

கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் வழங்க கடந்த  9-ந் தேதி டில்லி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை  சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். சோனியா  காந்தியும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தியும் நாளை தமிழகம் வருவதாக தகவ்ல வெளியாகி உள்ளது.

கருணாநிதி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு நாளை மாலை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் வட இந்திய தலைவர்கள் உள்பட பாஜகவுக்கு எதிரான கூட்டணி கட்சி தலைவர்களும்  கலந்துகொள்கிறார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தை, 5 மாநில தேர்தல் முடிவின் வெற்றிக்கொண்டாடமாக கொண்டாடும் வகையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.

5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் முதல்முறையாக  தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி. அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.