சென்னை:
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்து முதல்வரை பார்த்து சென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.rgapollo
உ.பியில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கிஸான் யாத்ரா என்ற பெயரில் அவர் உ.பி. மாநிலம் முழுவதும் சென்று பொதுமக்களையும், விவசாயிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்றுதான் உ.பி. பிரசாரம் முடிந்து டெல்லி வந்தார். இன்று லக்னோ செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் திடீரென விமானத்தை சென்னை நோக்கி ஓட்ட சொல்லி விமானியை பணித்தார்.
லக்னோ செல்லும் ராகுல் பயணம் குறித்து ஐபி அதிகாரிகள்  லக்னோ செல்வதாக ரிப்ப்போர்ட் போட்டு அங்குள்ள அதிகாரிகளுக்கும் மாநில உளவுத்துறைக்கும் தகவல் அனுப்பி விட்டனர். ஆனால்  ராகுல் விமானம் லக்னோ செல்லமால், விமானம் திசை மாறி செல்வதை அறிந்த  அதிகாரிகள் உடனடியாக  விமான நிலைய அதிகாரி களுடன் தொடர்பு கொண்டனர். அப்போதுதான்  விமானம் சென்னை நோக்கி செல்வது தெரியவந்தது.
raho-3
பின்னர் விசாரணையில்,  ராகுல்காந்திதான் திடீரென முடிவை மாற்றினார் என்று அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.
ராகுலின் திடீர் சென்னை விசிட் குறித்து,  விமானம் சென்னைக்கு வருவதற்கு சற்று முன்னர் தான் டெல்லி அதிகாரிகள் தமிழக ஐபி அதிகாரிகளுக்கும் , உளவுத்துறைக்கும், டிஜிபிக்கும் தகவல் அளித்தனர். அதையடுத்து உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிரடியாக செய்யப்பட்டது.
ராகுல்காந்தி திடீரென சென்னை வருவது குறித்து, தமிழக தலைவர்களுக்கே தெரியவில்லை. சென்னை புறப்பட்ட பிறகுதான் அவர் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பது தெரிய வந்தது.
உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராகுல் அடிக்கடி முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் பிரச்சாரத்தை முடித்த ராகுல் திடீரென தனது வழக்கமான நிகழ்ச்சிகளை  ஒதுக்கி வைத்துவிட்டு திடீரென சென்னை கிளம்பி விட்டார்.
ராகுல் காந்தி பிரதமருக்கு இணையான பாதுகாப்பில் உள்ள அரசியல் தலைவர். அவர் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய உளவுப்பிரிவு மற்றும் மாநில உளவுப்பிரிவு கண்காணிப்பு இருக்கும். அவருடைய பயணத்தை தனி லிஸ்டாக போடுவார்கள்.
ஆனால் இன்று காலை ராகுல் காந்தி யாரிடமும் சொல்லாமல் திடீரென கிளம்பி இருக்கிறார். தனி விமானத்தில் ராகுல் காந்தி கிளம்பியதும் தான் சென்னைக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து சென்றார்.
ராகுல் காந்தி வருகை பற்றி தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. தொலைக்காட்சி செய்திகளை பார்த்த பின்னரே திருநாவுக்கரசர் சென்று வரவேற்றுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி யதார்த்தமான அரசியல்வாதி. மற்றவர்களை போல ஆடம்பரத்தை நாடாமல் எளிமையாக பழக கூடியவர். வழக்கமான அரசியல் தவிர்த்து சாதாரணமாக செயல்பட கூடியவர்.
அவரது  இந்த திடீர் வருகை தமிழக அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.