டெல்லி: விவசாயிகள் பிரச்னையிலும் வழக்கம் போல இறங்கி வராமல் உள்ளார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச மாநில விவசாயிகள் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

வேளாண் சட்டங்கள் வியாபாரிகள், விவசாயிகள் இரண்டு தரப்பினரையும் இணைப்பவையாக உள்ளன. வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும். அதை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றார்.

அவரின் இந்த பேச்சை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.  இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: வழக்கமான அவரது பழக்கத்தின்படி இறங்கி வரவில்லை. விவசாயிகளின் கோரிக்கையைக் கேளுங்கள். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள் என்று கூறி உள்ளார்.