சென்னை:
மிழக அரசின் ரேஷன் அரிசி கேரளாவுக்கு ரெயில் மூலம் கடத்தப்பட இருந்தது  திடீர் சோதனை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ரெயிலில் பதுக்கி இருந்த 83 அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.
ரேசன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியை சமுக விரோதிகள் துணையுடன் கேரளாவுக்கு கடத்தி வருகிறது  அரிசி கடத்தல் கும்பல்.
ration-ags
தமிழ்நாடு அரசு பொது வினியோக திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசியை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. பெரும்பாலானவர்கள் இந்த அரிசியை சமைத்து சாப்பிடுவதில்லை. குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.
அவர்களிடம் இருந்து அரிசி கிலோ ஒன்றுக்கு  இரண்டு அல்லது மூன்று ரூபாய் விலைக்கு வாங்கி வருகிறது ஆங்காங்கே கடத்தல் கும்பல்கள். இந்த அரிசிகள் அனைத்தும் பாலிஷ் செய்யப்பட்டு  கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு திருட்டுத்தனமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த அரிசி வெளிச்சந்தையில் ரூ.20 முதல் ஏரியாவுக்கு தகுந்த விலையில்  விற்பனை செய்யப்படுகிறது.  இந்த அரிசி கடத்தலை தடுக்க தமிழ்நாடு அரசு பொது வினியோகத்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இன்று பொது வினியோகத்துறை அதிகாரிகள்  நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகருக்கு செல்லும் பயணிகள் ரெயிலில் திடீர்தீ சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 83 மூட்டைகளில் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இரண்டரை டன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட அரிசிக்கு உரிமைகோர யாரும் முன்வராததால், அரிசியை குடோனுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.