விஷால் அலுவலகத்தில் சோதனை

டிகர் விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் சில காட்சிகள், மத்திய அரசை விமர்சிப்பதாக இருக்கிறது என்றும் அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தலைவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைவர் ஹெச்.ராஜா, மெர்சல் படத்தை தான் இணையதளத்தில் பார்த்ததாக தெரிவித்தார்.  இதற்கு விஷால் நேற்று, “ வெட்கமே இல்லாமல் எப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? மன்னிப்பு கேளுங்கள்” என்று தெரிவித்தார்..

 

இந்த நிலையில் இன்று விஷால் அலுவலகத்தில்  ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.