சென்னை:

டிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் வசூல் தொடர்பாக அவரது வீடு, அலுவலகம் உள்பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன், ஏஜிஎஸ் நிறுவனம் உரிமையாளர்  உள்பட 3 பேரும் 3 நாட்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமா  வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த வாரம் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  நடிகர் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.  இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அதிரடி ரெய்டில், அன்புச்செழியன் மற்றும் கல்பாத்தி வீடுகளில், கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் ரூ.30 கோடிக்கும் மேலான  சொத்து ஆவணங்கள்,  பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஆய்வு செய்து வந்த  வருமானவரித்துறை அதிகாரிகள்  நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பி உள்ளனர்.  அடுத்த 3 நாட்களில் ஆஜராக வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. . இதுகுறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.