பாலாஜி குழுமத்தை சேர்ந்த மதுபான ஆலை உள்பட 40 இடங்களில் ரெய்டு! 40கோடி பறிமுதல்?

சென்னை:

பிரபல மதுபான ஆலை நிறுவனம் உள்பட பல நிறுவனங்களை நடத்தி வரும்  பாலாஜி குழுமத்தை சேர்ந்த 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத  40 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி  சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 7 கிலோ தங்கம் மற்றும் 16 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இந்த பணயம் மற்றும் தங்கம், பாலாஜி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான என்பது தெரிய வந்தது.

அதையடுத்து, பாலாஜி குரும நிறுவனர் ஸ்ரீனிவாசரெட்டிக்கு சொந்தமான தி.நகர் வீடு உள்பட,  பூந்தமல்லி அருகே உள்ள என்ட்ரிகா மதுபான ஆலை மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என 40 இடங்களில் வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் இதுவரை 40 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.