ரெய்டு: ராவ் வீடு அருகே துணை ராணுவப்படை குவிப்பு!

சென்னை,

மிழக தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் ஒருவர் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு ஆளாவது இதுவே முதல் முறையாகும். சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்க திட்டமிட்டு, அவருக்கு வேண்டியவரான சேகர் ரெட்டிக்கு அதற்கான உரிமையை வழங்கியவர் ராம்மோகன் ராவ்.

இன்று காலை முதலே அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில்  சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே  சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின் வாயிலாக  ரூ.10,000 கோடி அளவுக்கான  அரசு ஒப்பந்த பணிகளை சேகர் ரெட்டிக்கு ஒதுக்கி சகாயம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

 

இதன் காரணமாக  தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் வீட்டிற்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அண்ணாநகரில் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுவதை அடுத்து மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed