ரெய்டு: பிரபல கன்னட நடிகர் மருமகன் வீட்டில் ரூ.6.6 கோடி, 32 கிலோ தங்கம் பறிமுதல்!

சித்ரதுர்கா,

பிரபல கன்னட நடிகரின்  மருமகனின் வீட்டில்  இருந்ரூது .6.6 கோடி பணம், 32 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் தொட்டண்ணாவின் மருமகன் கே.சி. வீரேந்திரா. மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதள கட்சி நிர்வாகி .

கன்னட நடிகர் தொட்டண்ணா

நேற்று வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், வீ ரேந்திராவின் வீட்டில் இருந்து ரூ.6.6 கோடி ரொக்கம், 28 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 4 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

வீரேந்திராவின் சொகுசு பங்களால வீடு  கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேவில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார். இறுதியாக அவர் ஒளித்து வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை அவரது பாத்ரூம் சுவரில் ரகசிய அறை வைத்து பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை உடைத்து பார்த்தபோது,  அதில் ரூ. 6.60 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.5.7 கோடி ரொக்கம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.

ரூ. 90 லட்சம் அளவுக்கு 100 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. நேற்று நடத்திய சோதனையில் அதிகாரிகள் கிலோ கணக்கில் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

வீரேந்திராவின் வீட்டில் இருந்து 28 கிலோ தங்கக் கட்டிகள், 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வீரேந்திராவின் வீடு தவிர அவரது சகோதரர் கே.சி. நாகராஜ் மற்றும் திப்பேசாமி ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி