சென்னை,

மிழகத்தில் சசிகலா குடும்பத்தினர் மீது நடைபெற்று வரும் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் சொத்து ஆவனங்கள், நகைகள், பணங்கள் பற்றிய மதிப்பு பொதுமக்களை வாயைப் பிளக்க வைத்துள்ளது.

இந்நிலையில், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5 நாட்களாக சசிகலா, தினகரன், திவாகரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடுகளில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டு  என்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் மட்டும் சோதனை யிடாமல் அவர்களுக்கு உதவியாக இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், உடன் இருக்கும் அமைச்சர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே ஜெயலலிதா சிகிச்சை குறித்த சிடி இருப்பதாக கூறியள்ள தினகரன் அதை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், தற்போது பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது,  குஜராத் தேர்தலை முன்னிட்டே நடைபெற்றது என்றும், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.