சென்னை:

கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்த தனி வார்டு களாக தென்னக ரயில்வேயின்  ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டு வருவதாக  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ஏற்கனவே ரயில்வே அமைச்சர் பியூஸ் கோவில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைகாக ரயில் பெட்டிகள், சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்திருந்த நிலையில், தென்னக ரயில்வேயும், தமிழகத்தில் கொரோனா வார்டுகளாக  ரயில்பெட்டிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில்பெட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி அன்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல மருத்துவ மனையின் சில பகுதிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு இருக்கும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் பட்சத்தில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வார்டுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, தெற்கு ரெயிவேக்கு சொந்தமான ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.  ஏசி அல்லாத ரயில்களை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் படுக்கை வசதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 கேபின்கள் கொண்ட பெட்டிகளில் ஒரு கேபினுக்கு ஒரு நோயாளி எனவும்  எண்ணிக்கை அதிகரித்தால் ஒரு கேபினுக்கு இரண்டு நோயாளிகள் என தனிமைப்படுத்த திட்டமிடபட்டுள்ளது.

இதற்காக கேபின்கள் மேலே ஏறுவதற்கு இருக்கும் ஏணியை நீக்கவும், கழிவறையை  குளியலறையாக மாற்றவும், கைகழுவ உரிய வசதியும் ஏற்படுத்த பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

நோயாளிகள் தனிமையில் இருக்கும் நிலையில் அவர்களின் வசதிக்காக சார்ஜ் செய்ய 230 வோல்ட் பிளக் பாயின்டும், மருத்துவ சாதனம் வைக்க வசதியும், இரண்டு படுக்கையை தனிமைபடுத்த திரைசீலையும் அமைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், அனைத்து ரயில்பெட்டிகளும் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது