டெல்லி: 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்,பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊடரங்கை பிறப்பித்து மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளன. பல மாநிலங்களுக்கு தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே முழு அளவில் தயாராகி கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது காலியாக இருக்கும் பெட்டிகள் மீண்டும் தற்காலிக ரயில் பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன.

இதனால் ரயில் பெட்டிகளையும், கேபின்களையும் தனிமைப்படுத்துதலுக்கான மையங்களாக மாற்றும் பணியை ரயில்வே செய்து வருகிறது. இந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அங்கிருந்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக மொத்தம் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது.