ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

டெல்லி: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ. 30 ஆயிரம் கோடிக்கு தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: 2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்த, நவீனப்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை. நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட, தரமான ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கப்படும்.

அதற்காக சில குறிப்பிட்ட திட்டங்கள் மட்டும் தனியார் துறை பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல்  தெரிவித்தார்.