டெல்லி: ரயில்வே துறையில் அனைத்து சேவைகளுக்கும் உரியை கட்டணத்தை உபயோகிப்பாளர்கள் செலுத்த வேண்டி வரும் என்று அருண்ஜெட்லி கூறினார். இதனால் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்திய தொழிற் கூட்டமைப்பும் ரயில்வேயும் இணைந்து டெல்லியல் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது: அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதால் உலகில் உள்ள பல ரயில்வே துறைகள் பல மடங்கு லாபத்துடன் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் இந்தியாவில் எல்லாம் தலை கீழாக இருக்கிறது. இதில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது/ வரும் காலங்களில் ரயில்வே உபயோகிப்பாளர்கள் உரிய கட்டணம் செலுத்த வேண்டி வரும். எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அதற்கு வாடிக்கையாளர்கள் தகுந்த சேவைக் கட்டணங்களை செலுத்தியாக வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு அளிக்கும் சேவைகள் விஷயத்தில் ரயில்வே மிகுந்த கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்குறியது.
 

இவ்வாறு அவர் பேசினார். அருண்ஜெட்லியின் இத்தகைய பேச்சால் எதிர்வரும் பட்ஜெட்டிலோ, அல்லது அதற்கு முன்போ ரயில் கட்டணம் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது
 
Railway fares set to increase. FM hints at a meeting.