புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், தற்போது ரயில்கள் ஓடாத நிலையில், கிடப்பிலிருக்கும் ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; 12,270 கி.மீ. நீளத்திற்கான சமவெளிப் பகுதி ரயில் பாதைகள் மற்றும் 5263 டர்ன் அவுட்களில் நிலுவையில் இருந்த பராமரிப்புப் பணிகளை முடிக்க, ரயில் பாதை பராமரிப்புக்கான கனரக இயந்திரங்கள், சிக்னல் சாதனப் பராமரிப்பாளர்கள் என்று மொத்தம் 500 நவீன இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன.
இவற்றின் மூலம் சுமார் 10,749 இயந்திர வேலை நாட்களுக்கு ஈடான வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
முக்கியமான பாலப் பணிகள்
* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே (தெற்கு ரயில்வே) சாலையின் மீது செல்லும் பாலத்தை அகற்றுதல்
* ராஜமுந்திரி – விசாகப்பட்டினம் பிரிவில் (தெற்கு மத்திய ரயில்வே) 4 x 5.5 மீ பாதைக்கு இணைப்பிற்கான பாலம் கட்டும் பணி
* தென் மத்திய ரயில்வேயில் பாலம் எண் 525 இடத்தில் சுரங்கம் நுழைவுப் பணி
* லூதியானா ரயில் நிலையத்தில் (வடக்கு ரயில்வே) உபயோகத்தில் இல்லாத பழைய இரட்டை மேம்பாலங்களை அகற்றும் பணி
உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ரயில் பாதை பணிகள்
* விஜயவாடா பணிமனையில் குறுக்காக கடக்கும் பாதையை கான்கிரீட் லேஅவுட் கொண்டதாகப் புதுப்பித்தது (தெற்கு மத்திய ரயில்வே).
* பெங்களூரு சிட்டி பணிமனையில் மாற்றி அமைக்கும் பணிகள் (தென் மேற்கு ரயில்வே)
* பரோடா ரயில் நிலையத்தில் (மேற்கு ரயில்வே) 1 மற்றும் 2வது லைன்களில் சிமென்ட் கான்கிரீட் காப்புத் தளம் பழுதுநீக்கம்
உள்ளிட்ட சில முக்கியமான பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.