டில்லி

ரெயிலில் ஜன்னல் வழியாக நடைபெறும் திருட்டுக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் தீர்ப்பு அளித்துள்ளது.

நந்தகிஷோர் என்னும் பயணி கடந்த 2012ஆம் ஆண்டு சென்னையில் இருந்து டில்லிக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளார்.    ரெயில் வழியில் மத்தியப் பிரதேச ரெயில் நிலையம் ஒன்றில் நின்றது.   அப்போது நந்தகிஷோரின் நகையை ஜன்னல் வழியாக பறிக்கப்பட்டுள்ளது.    இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்றம் ரெயில்வே நிர்வாகம் நந்த கிஷோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.   அதை ஒப்புக் கொள்ளாத நீதிமன்றம் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தது.

அதை விசாரித்த ஆணையம் பயணிகளின் பொருட்கள் ஜன்னல் வழியாக திருடப்பட்டால் அதற்கு ரெயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என தீர்ப்பளித்தது.   மேலும் பயணி நந்தகிஷோருக்கு ரெயில்வே நிர்வாகம் எந்த இழப்பீடும் தர தேவையில்லை என திர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.