Random image

சிசிடிவி கேமரா பொறுத்த ரூ.2,500 கோடி கடன் வாங்க ரெயில்வே திட்டம்

டில்லி:

ரூ. 2,500 கோடி கடன் வாங்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரெயில்வே ஸ்டேஷன்கள், ரெயில் பெட்டிகளில் ரூ. 3,000 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்த ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டது. இதற்கு முதற் கட்டமாக நிர்பயா நிதியில் இருந்து ரூ. 500 கோடி வழங்கப்பட்டது.

இதன் மூலம் 436 ரெயில்வே ஸ்டேஷன்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் 547 ரெயில்வே ஸ்டேஷன்களிலும்கேமரா பொருத்த வேண்டியுள்ளது.

இதற்காக இந்திய ரெயில்வே நிதி கழகம் மூலம் கடன் பெற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த தொகைய சிசிடிவி கேமரா திட்டத்தை செயல்படுத்தும் ரெயில்டெல் தொலைத் தொடர்பு நிறுவனம் திரும்ப செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.