ஜோலார்பேட்டை:

ரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சேலம் வரை செல்லும் மெமோ பாசஞ்சர் ரயில் வழக்கம் போல் இன்று காலை 4. 40க்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது பின்னர் 7.50க்கு ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாணட்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது ரயில் இன்ஜினில் உள்ள பெண்டோ இரும்பு ராடு துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப் பட்டது இதனால் ரயில் உடனே அங்கு நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து ரயில் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த னர் அதன் பேரில் விபத்து தடுப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் சீரமைப்பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த குழுவில் உள்ளவர் கோபிநாத் (வயசு 40)  இவர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சீனியர் டெக்னீசியன் ஆக வேலை செய்து வருகிறார்.  ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த  இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகன் மகள் உள்ளனர்.

மெமோ பாசஞ்சர் ரயிலின் பழுது  பணியை முடித்து, விட்டு  கேதண்டபட்டி ரயில்வேகேட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச்செல்ல வரும்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.