சென்னை:

ன்று முதல் நாலு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையமும் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

வானிலை மையங்களின் ஆய்வை மெய்ப்பிக்கும் வகையில் இன்று காலை முதல் சென்னையில் மிதமான மழை பெய்ய தொடங்கி உள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (10ம் தேதி) முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதற்கிடையில் வங்க கடலில் குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால் கடந்த மாதம் 28ந்தேதி முதல் 5 ந்தேதி வரை சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கன மழை பெய்தது.

இதன் காரணமாக சென்னை வாழ்  பொதுமக்களின் அன்றாடக வாழ்க்கை முடங்கியது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அரசும் நடவடிக்கை எடுத்து தண்ணீரை அகற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

“அரபிக்கடலில் கேரளா பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை இருக்கும். ஆனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘ தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது” என தெரிவித்துள்ளது.

வானிலை அறிவிப்புக்கேற்ப இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.