மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் வேண்டுகோள்!

சென்னை,

டந்த இரண்டு நாள் பெய்த கன மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடசென்னையில் பெரும்பாலான பகுதிகள் மற்றும்  சைதைப்பேட்டை,  கொரட்டூர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் தா  நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், தொண்டு நிறுவனம், திருமண மண்டபம், அவரது இல்லம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பராமரிப்புகளை தானே செய்து தருவேன் என்றும் கூறி உள்ளார்.