மழையால் ரத்தான பெங்களூரு – ஹைதராபாத் போட்டி!

--

Rain forces officials to call off match; both teams award a point each

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பெங்களூரு – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான 29 ஆவது லீக் போட்டி,‌‌ மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

 

பெங்களூருவில் நேற்றிரவு நடைபெறவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர் மழையின் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன்படி, பெங்களூரு அணி 5 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஐதராபாத் அணி‌ ஒன்பது புள்ளிகளுடன் மூன்றாவது‌ இடத்தில் நீடிக்கிறது.