நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை :     சென்னையிலும் மழை

சென்னை

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு இயக்குனர் ஸ்டெல்லா நெல்ல மற்றும் குமரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என அறிவித்துள்ளார்.  மேலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வடகிழக்கு பருவமழை இதுவரை 27 செ மீ பெயுதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில்  அண்ணா நகர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், மீனம்பாக்கம்,, கேளம்பாக்கம், ராயபுரம், ஆலந்தூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.   இது தவிர அரும்பாக்கம், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.