கடலோரப் பகுதிகளில் இன்று மழை: வானிலை மையம் தகவல்

சென்னை,

மிழகத்தில் கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கோட்டைமேடு, பசும்பெண், அபிராமம், நெடுங்குளம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கினாலும், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர், வேலாயுதம்பாளையம், மாயனூர் உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக நேற்று சாரல் மழை பெய்தது.

புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக்காலில் நேற்று பகல் நேரத்தில் விட்டு விட்டு பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

அதைத்தொடர்ந்து இன்றும் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.