தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: 

மிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில்,  லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்த வளிமண்டல சுழற்றி காரணமாகவும், . வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி