மழை: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Velachery_2646289g

நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. “இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”  என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து சென்னை மாநகர வட்டாரங்கள் தெரிவித்ததாவது: “ஒவ்வொரு மண்டலத்திலும் தனி அணி அமைக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த பகுதியில்  கழிவு நீர் தேங்காமல் கவனிக்கும். மேலும்  சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை உடனே எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. . தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால் மக்களை தங்க வைக்க சிறப்பு முகாம்கள் தாயராக உள்ளன. அதே போல அனைத்து மண்படலங்களிலும்  மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன”  இவ்வாறு மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.