மழை காரணமாக 2வது டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் ரத்து

இங்கிலாந்துக்கு எதிரான 2வது நாள் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியை தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு பந்துக்கூட வீசாமல் போட்டி ரத்தானது.

test-match

வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 31ரன்கள் வித்யாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் தொடர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை காரணமாக ஆட்டம் ரத்தானது. காலை முதல் மழை பொழிந்ததால் போட்டி மதியம் வரை ரத்தானது. உணவு இடைவேளை அரைமணி நேரத்திற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு கூட சாரல் மழை பொழிந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்து தேநீர் இடைவேளையும் வந்தது. அதன்பிறகும் சாரல்மழை துர்திருஷ்டவசமாக பொழியவே நேற்றைய போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக முதல்நாள் ஆட்டம் கைவிடப்படுவதக அறிவிக்கப்பட்டது. இதனால் 5நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி 4நாட்களுக்கு மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 2வது நாள் ஆட்டம் வழக்கமான நேரத்தை காட்டிலும் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுக்க முடியாமல் போனது.