துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது

சென்னை:

சென்னை  ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது.

 

கடந்த பல மணி நேரங்களாக சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் பலவற்றில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குளும் மழைநீர் புகுந்தது  தரைதளத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.