அனலை குறைக்க வருகிறது மழை!: வானிலை மையம் அறிவிப்பு

images

“கத்திரி வெயில்  தாக்கத்தால் தவித்துப்போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யும்” என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை அருகே தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட, தென் தமிழக பகுதிகளிலும் புதுவையிலும் வரும் 15, 16 தேதிகளில் மழை பெய்யும்” இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.