சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – தோனியின் வழித்துணையாக இணைந்த ரெய்னா!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்த சிறிதுநேரத்தில், முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய அணியில், ஒரு நல்ல பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே எனப்படும் சென்னை அணியில் துணைக் கேப்டனாக இருப்பதுடன், அந்த அணியில் பல்லாண்டுகளாக தக்கவைக்கப்பட்டு வருகிறார்.

சுரேஷ் ரெய்னாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும், தனது ஓய்வை அறிவிக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில், தோனி அறிவித்ததும், ரெய்னாவும் அறிவித்துவிட்டார்.

இவரும் இன்ஸ்டாகிராம் வழியாக தனது ஓய்வை அறிவித்துள்ளார். “இந்தப் பயணத்தில் உங்களுடன் இணைவது என்று முடிவு செய்துள்ளேன். இந்தியாவுக்கு நன்றி” என்றுள்ளார் ரெய்னா.